கோவை அருகே ரூ.73 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை!

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமையில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை பன்னிமடை ஊராட்சி கணுவாய் பகுதியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் நிதியில் ரூ.18 லட்சத்தி 60ஆயிரம் மதிப்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே கலையரங்கம் அமைத்தல், ஊராட்சி பொதுநிதியில் ரூ.27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 10வது வார்டில் வடிகால் பணிகள் அமைத்தல்



11 மற்றும் 12வது வார்டுகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் வடிகால் மற்றும் சாலை பணிகள், 13வது வார்டில் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் சாலைபணிகள் மற்றும் கே.என்.ஜி.புதூர் 15வது வார்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



ஊராட்சி தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத்தலைவர் அருள்குமார், ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பன்னிமடை வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ராமச்சந்திரன், கவிதா, கோபால்சாமி, மாரித்தாய், விஜயலட்சுமி, சிவக்குமார், லதா, ஜெயமணி, சாந்தி, முருகேஷ், வாசுமணி, கணுவாய் ஊர் முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...