தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து - 22 பேர் காயம்!

தாராபுரம் அடுத்த சோமனூத்து பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் சத்திரம் பகுதியில் கூலி வேலைக்குச் சென்று திரும்பிய சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 22பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: தாராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சத்திரம் பகுதிக்கு வெங்காயம் அறுவடைக்கு சென்று விட்டு மாலை சரக்கு வாகனத்தில் வீடு திரும்பினர்.

இவர்கள் பயணித்த சரக்கு வாகனம் சோமனூத்து என்ற இடத்தில் வந்த போது, பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த லட்சுமி, முருகம்மாள், ஈஸ்வரி, மாரியம்மாள், காளியம்மாள் உட்பட 18 பேருக்கு லேசான காயமும், 4 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.



பலத்த காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் தாராபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சாலை விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...