தாராபுரம் அருகே கார் மோதி விபத்து - பைக்கில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரியநல்லூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சின்னசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் நாச்சிமுத்து என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சூரியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாச்சிமுத்துகவுண்டர் மகன் சின்னசாமி (வயது 70). இவர் உப்பாறு அணையில் இருந்து சூரியநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புறவழிச் சாலையில் திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற கார் சின்னசாமியின் இருசக்கர டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் முதியவர் சின்னசாமியின் தலை சொகுசு காரின் பம்பரில் மாட்டி கொண்டது.



அதே நேரத்தில் கால்கள் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கார் வேகமாக பிரேக் அடித்ததில் தலை பம்பர் கம்பியில் பட்டு தலை அறுந்து துண்டானது. கால் முறிவு ஏற்பட்டு 100 மீட்டர் தொலைவிற்கு சின்னசாமியின் உடலை தர தரவென இழுத்துக் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் நாச்சிமுத்து என்பவரை பிடித்து குண்டடம் காவல்துறையில், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரின் தலை சாலை விபத்தில் துண்டான சம்பவம் சூரியநல்லூர் பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியநல்லூர் பகுதியில் சிக்னல்கள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் திருப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதாகவும் அதை கட்டுப்படுத்த மேலும் சிக்னல்கள் அமைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்க வேகத்தடைகள் அமைத்து அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...