காட்சி தொடர்பியலில் சாதிக்கும் கோவை மாணவர்கள் - தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை வென்று அசத்தல்!

‘ஆஸ்கர்’ விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வ்ஸ், கோவை கல்லூரியில் காட்சி தொடர்பியல் படித்தவர். கோவையில் காட்சி தொடர்பியல் (விசுவல் கம்யூனிகேசன்) துறையில் படித்த மாணவ-மாணவியர் சினிமா, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை வென்று அசத்திவருகின்றனர்.


கோவை: சினிமா, ஊடகம் சார்ந்த கல்வியில் தேசிய விருது முதல் ஆஸ்கார் விருது வரை வென்று சாதனை படைத்து வருகின்றனர், கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள்.



உயர் கல்வியில் காட்சி தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) உள்ளிட்ட ஊடகம் சார்ந்த படிப்புகள் மீது மாணவ, மாணவிகளுக்கு ஆர்வம் இருந்தபோதும், சமுதாயத்தின் பார்வை காரணமாக பெரும்பாலான பெற்றோர் இத்தகைய படிப்புகளில் தங்களின் குழந்தைகள் சேர்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.



தற்போது தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை வென்று பல்வேறு சாதனைகளை படைத்துவரும் காரணத்தால் காட்சி தொடர்பியல், ஊடகம் சார்ந்த படிப்புகள் மீது சமுதாயம் கொண்டிருந்த பார்வை முற்றிலும் மாறத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, கோவை கல்லூரிகளில் இத்துறையில் படித்த ஏராளமானோர் சினிமாவிலும், செய்தி ஊடகங்களிலும் கோலோச்சி வருகின்றனர்.



கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியின் ஊடக தொடர்பியல் மற்றும் காட்சி தொடர்பியல் துறை முன்னாள் தலைவர் பிச்சாண்டி கூறுகையில்,

சென்னை பல்கலை. துணைவேந்தராக பணியாற்றிய ஜிஆர்.தாமோதரனின் முயற்சியால் கோவையில் முதல் முறையாக கடந்த 1981-ம் ஆண்டு ஊடக தொடர்பியல் உயர்கல்வி தொடங்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கு பின் பி.எஸ்சி காட்சி தொடர்பியல் படிப்பு கோவை கல்லூரிகளில் தொடங்கப்பட்டன.

அதிநவீன தொழில்நுட்ப உபகரண வசதிகளுடன் கூடிய லேப், மினி திரையரங்கு, மியூசிக் ஸ்டூடியோ, வானொலி நிலையம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இன்று தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர், என்றார்.

‘ஆஸ்கர்’ விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வ்ஸ், கோவை கல்லூரியில் காட்சி தொடர்பியல் படித்தவர். அவரது ஆசிரியை ராதா கூறும்போது,‘‘கோவையில் இன்று பல கல்லூரிகளில் காட்சி தொடர்பியல் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. சினிமா, ஊடகம், சின்னத்திரை, வானொலி உள்ளிட்ட திறமைக்கேற்ப சாதனை படைக்க பல்வேறு துறைகள் உள்ளன.

மக்களை சிந்திக்க, சிரிக்க வைக்க உதவும் வகையிலான முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆர்வத்தைவிட திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கார்த்திகி கான்சால்வ்ஸ் மற்றும் அவரது குழுவினரின் சாதனைக்கு கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை உள்ளிட்டவையே காரணம்’’ என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...