வாயில் காயத்துடன் மீட்கப்பட்ட பெண் காட்டுயானை - பொள்ளாச்சியில் சிகிச்சை பலனின்றி பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் முகாமில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வன சரகம் ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்த சுமார் 15 வயதுமிக்க பெண் காட்டு யானை டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் வனத்துறை யானைகள் பயிற்சி மையத்திற்கு கடந்த 17ம் தேதி இரவு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டது.



இரண்டு தினங்களாக யானைக்கு வன கால்நடை மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில தினங்களாக உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு மருத்துவர்கள் குளுகோஸ் போன்ற மருந்துகள் செலுத்தி வந்தனர்.



ஆனால், சோர்வுடனே காணப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கால்நடை மருத்துவக் குழுவினர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...