கோவையில் நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீவிபத்து - 10க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

கோவை வடவள்ளியில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம், சிவகாமி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்கு மையத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளேயே சிக்கி தீயில் கருகி உயிரிழந்தன.



வனவிலங்கு நல ஆர்வலர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய விலங்குகள் நல வாரிய பிரதிநிதியான பிரதீப் பிரபாகரன் என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், எனவே அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் செயல்பட்ட பாபு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்கள் இனப்பெருக்க மைய உரிமையாளர் பாபு என்பவரை தேடி வருகின்றனர். நாய்கள் இனப்பெருக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியேற முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூண்டிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...