கோவையில் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் அலெக்ஸ் ஜோசப், சல்மான் இருவரும் நள்ளிரவில் டீ குடித்துவிட்டு அறைக்கு திரும்பியபோது சாலை தடுப்பில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் பலியாகினர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அறையில் இருந்த அலெக்ஸ் ஜோசப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மலுமிச்சம்பட்டி நோக்கி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றனர்.



பின்னர் மீண்டும் அறைக்கு வருவதற்காக சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...