கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது

கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது, பாஜக சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கி, கோவை மாவட்ட பாஜக மகளிரணி கவுரவித்தது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதுகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் மோகன பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி அருணா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் பேசியதாவது:

பெண்கள் என்றாலே சாதனையாளர்கள் தான், ஆண்களை விட வலிமையாளர்கள் பெண்களே, குடும்ப வாழ்க்கையை கையால்வதிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்குகின்றனர். பொதுவாக பெண்கள் துணையில்லாமல் ஆண்களால் குழந்தை வளர்க்க முடியாது, ஆனால் ஒரு பெண் எந்த துணை இல்லாமலேயே குழந்தைகளை வளர்ப்பதோடு தனது வாழ்க்கையை மேம்படுத்துகின்றனர்.

இந்திரா காந்தி பெண் பிரதமர் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தியாவிலேயே சிறந்த கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் என பெண் நிர்வாகிகளே உள்ளனர். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தெலுங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன் என்ற பெண் தான்.

மத்தியில் நமது ஆட்சி சிறப்பாக நடக்க பாஜகவில் உள்ள 11 பெண் அமைச்சர்களும் முக்கிய காரணம். அதே போல பாஜகவில் 33 சதவீதம் பெண்களுக்கு பொருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. கம்பீரமாக வலம் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

தமிழகத்திலேயே கோவை மாவட்ட மகளிர் அணி தான் சிறந்த அணியாக உள்ளது. கொடுத்து பணிகளை விட அதிக பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...