கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் - பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிவிப்பின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அறிவிப்புகள் இங்கே..

கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம்.



வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும். இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் கட்டப்படும்.

அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும்

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு

வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்

தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிப்பு

இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு

சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்

தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்

இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறப்பு

சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்

54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்

பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரிப்பு

கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும்; இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்.

5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்

அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

மரக்காணத்தில் ரு.25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்

கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம். 5,145 கிலோ மீட்டர் ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கான நவீன விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய 4 இடங்களில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் 

வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு. 

விருதுநகரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் 

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும் 

சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும். 

சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரு20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். 

சென்னையில் ரு320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். 

தெரு நாய்களுக்கு கட்டுப்பாட்டு மையம் - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. 

கோவையில் செம்மொழி பூங்கா 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். 

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 

மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரு1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் 

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000  வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் 

சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்  

ரூ.4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது 

அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரு.40 லட்சத்தில் இருந்து ரு.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 

பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

இதுபோன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...