கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது!

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலணி மற்றும் நீலிகோணாம்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலியை சேர்ந்த குரூஸ் சகாயராஜ் எனவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நெசவாளர் காலணி பகுதியில் நடந்து சென்ற பெண்ணுன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்றுபேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நெசவாளர் காலணி பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் மூன்றுபேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவந்த போலிசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த குரூஸ் சகாயராஜ் என்பதும் சிங்காநல்லூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த அவனது நண்பர்கள் இருவர் சமீபத்தில் இவனுடன் சிறிதுநாள் தங்கியிருந்து மூவரும் சேர்ந்து அந்த பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவனுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கடந்த வாரம் சிவகங்கை போலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குரூஸ் சகாயராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...