உடுமலை அருகே சரக்கு வேன்கள் மோதல் - கிளீனர் உயிரிழப்பு

உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சரக்கு வேன் ஒன்று முன்னால் சென்ற மற்றொரு வேனை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் கிளீனர் நாகராஜ் என்பவர் பலியானார்.


திருப்பூர்: உடுமலை அருகே சரக்கு வேனை முந்த முயன்ற மாற்றொரு சரக்கு வேனின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் நாகராஜ் (24). இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் குடிமங்கலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு காய்கறி ஏற்றிச்சென்ற சரக்கு வேனில் கிளீனராக சென்றுள்ளார். அந்த வண்டியை திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசபாண்டி என்பவர் ஓட்டியுள்ளார்.

அந்த சரக்கு வேன் குடிமங்கலத்தையடுத்த சுங்காரமடக்கு பிரிவு அருகே சென்றபோது முன்னால் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக சிமெண்ட் வேனின் பின்புறத்தில் காய்கறி வேன் மோதியது.

இதில் காய்கறி வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகராஜ் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாகராஜின் மனைவி அளித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...