குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன்..! - கோவையில் நடிகை கவுதமி பேட்டி

தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று அரசு அறிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை கவுதமி, மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை நான் வரவேற்பேன். அரசாங்கமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும், என்றார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் நடிகை கௌதமி பங்கேற்றார்.



கோவை குனியமுத்தூரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் நடிகை கௌதமி பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

ஜி 20 மாநாடு நமது இந்தியாவில் நடப்பது நமது தேசத்திற்கே ஒரு கெளரவம். இந்த கௌரவமும், அங்கீகாரமும் தற்போது கோவைக்கு கிடைத்துள்ளது. நம் தேசத்தின் இளைஞர்களுடைய எதிர்காலம் தேசத்திற்கு மட்டுமல்லாமல், உலக வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது, தேவையானது என எடுத்துக்காட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக ஆளுநர் பேசியுள்ளார்கள்.

ஜி 20-யில் இனி அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்ச்சிகள் இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும். அனைவருக்கும் தேவையான நிகழ்வாகவும் அமையும். ஜி 20-யில் இருந்து நம்மால் என்ன எடுத்துக் கொள்ள இயலும் என்பதை நாம் பார்க்க வேண்டும். சுயநலம் என்பது நமது நல்லதிற்காக, நாம் தலை நிமிர்ந்து இன்னும் கௌரவமாக பெருமையாக வாழ்வதற்கு என்ன சாதிக்கலாம் என்பதை இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜிஸ்டி என்பது உலக அளவில் எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் மீண்டும் அரசியல் பேச்சை கொண்டு வரக்கூடாது, அதுதான் தேசத்திற்கு மிகவும் நல்லது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என தற்போது தெரிவித்துள்ளது குறித்து கேள்வி பதில் அளித்த அவர், மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை நான் வரவேற்பேன் எனவும், அரசாங்கமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.

கேஸ் விலை உயர்வு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், இது ஒரு வார்த்தையில் கூறுகின்ற பதில் அல்ல எனவும், உலக அளவில் நடைபெறுகின்ற, பல்வேறு விஷயங்கள் சேர்ந்து தான் இது போன்ற மாற்றங்கள் வருகிறது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...