உடுமலை குட்டைதிடல் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் - உடனடியாக அகற்ற வலுக்கும் கோரிக்கை!

உடுமலை அருகேயுள்ள குட்டைத்திடல் பகுதியில் அனுமதியில்லாமல் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைத்திடல்,கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்படுவதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை அடுத்த குட்டைத்திடல் பகுதியில் அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், இங்குள்ள வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.



குட்டைத்திடல் பகுதியானது போதிய பாதுகாப்பு இல்லாமல் அமைந்துள்ளதால், குப்பை, கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.



மேலும் இந்த குட்டை திடல் பகுதியை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில், உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபம், காந்தி சிலை, முதற்கிளை நுாலகம், காவல் நிலையம் அமைந்துள்ள நிலையில், இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் மார்ச் 23ஆம் தேதி நோன்பு சாத்தப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும் நிலையில் குட்டைதிடல் பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...