கோவை அசோகபுரம் பள்ளியில் சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அருகேயுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் துறை மற்றும் சிட்டுக்குருவிகள் அறக்கட்டளையினர் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.



கோவை: அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனியிலுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தினர், சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் தலைவர் கேசவசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை நிறுவனர் தனசேகர் முன்னிலை வகித்து சிட்டுக்குருவிகள் எப்படி வளர்க்க வேண்டும், பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.



இதில் பொறியியல் கல்லூரியிலிருந்து வந்த சிட்டுக்குருவிகள் விழிப்புணர்வு பேருந்து வாகனத்தில் ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த சிட்டுக்குருவிகள் பற்றியான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் பறவைகளின் சத்தம் அடங்கிய ஆடியோக்கள் லேப்டாப் மூலம் போடப்பட்டு காண்பிக்கப்பட்டது.



கல்லூரி மாணவ, மாணவிகள் சிட்டுக்குருவி மற்றும் கிளி மாதிரியான வேடமிட்டு பறவைகள் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதில் பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராக பேருந்தில் ஏறி அங்கிருந்த ஓவியங்களை பார்த்தும், அதுகுறித்தான தகவல்களை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...