உடுமலை அருகே இலவச பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் மனு

உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூரில் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்புதூரில் அருந்ததியர், போயர் மற்றும் வண்ணார் சமூகத்தினர் சுமார் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒவ்வொரு வீட்டில் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



எனவே இவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை அணுகி பல்வேறு கால கட்டங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு செய்துள்ளனர்.



மேலும் தொடர்ந்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் கண்ணாமணியிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று மனு வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...