தமிழக பட்ஜெட்டுக்கு காட்மா சங்கம் வரவேற்பு!

தமிழக பட்ஜெட்டில் கோவை மெட்ரோ திட்டம், தொழில்பயிற்சி நிலையங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு, சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கான நிதி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாக காட்மா சங்கம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழக அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக, கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் (காட்மா) சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காட்மா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகம்‌ முழுவதும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களை புதுப்பிக்க 2,877 கோடி நிதி ஒதுக்கப்படும்‌, 54 பல்நோக்கு தொழிற்‌ கல்லூரிகள்‌ அமைக்க 2,789 கோடி நிதி ஒதுக்கப்படும்‌, கோவை மாவட்டத்தை மேம்படுத்த எழில்‌ மிகு கோவை திட்டம்‌ தயாரிக்கப்பட்டு அதன்‌ மூலமாக சாலைகள்‌, சுகாதார வசதி மற்றும்‌ தொழிற்பூங்காக்கள்‌ அமைக்கப்படும்‌.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ துறை நிதி கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டு 1509 கோடியாக ஒதுக்கீடு செய்யப்படும்‌, கோவை மெட்ரோ ரயில்‌ திட்டத்திற்கு 9,000‌ கோடி நிதி ஒதுக்கப்படும்‌, தொழில்‌ வளர்‌ காப்பகங்களை மேம்படுத்த புத்தொழில்‌ தமிழ்நாடு இயக்கத்தில்‌ தனிப்பிரிவு அமைக்கப்படும்‌. தற்போது இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ தொழிற்கூடங்களை மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்‌ விதமாக திறன்‌ வளர்‌ பள்ளிகளாக மாற்ற 25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌, வரும்‌ நிதியாண்டில்‌ 10 லட்சம்‌ இளைஞர்களுக்கு தொழில்‌ பயிற்சி அளிக்கப்படும்‌, மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும்‌ திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌ ஆகிய அறிவிப்புகளை காட்மா சங்கம்‌ வரவேற்கிறது.

அதே நேரத்தில்‌ தொழில்‌ முனைவோர்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கைகளான தொழிற்‌ பூங்காக்கள்‌ அமைக்க குறைந்தபட்ச நில அளவு 2 ஏக்கர்களாக குறைக்கப்பட வேண்டும்‌, குறுந்தொழில்களுக்கு என குறுந்தொழில்‌ வளர்ச்சி வங்கி உருவாக்கப்பட வேண்டும்‌, உயர்த்தப்பட்ட மின்‌ கட்டணம்‌ மற்றும்‌ சொத்து வரி குறைக்கப்பட வேண்டும்‌,

5 மற்றும்‌ அதற்கு குறைவான ஆட்கள்‌ வேலை செய்யும்‌ குறுந்தொழில் கூடங்களுக்கு தொழில்வரி மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ வரியில்‌ இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்‌ ஆகியவற்றிற்கான அறிவிப்புகளை வரும்‌ பட்ஜெட்‌ கூட்டத்‌ தொடரிலாவது அறிவித்து, நிறைவேற்றி தந்து குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு உதவ வேண்டும்

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...