மேட்டுப்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சார்பில் இலவச பொது நல மருத்துவ முகாம்!

ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சார்பில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய, பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இலவச பொது நல மருத்துவ முகாமில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சார்பில் நடைபெற்ற 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராமகிருஷ்ணா இயக்கத்தின் 125வது ஆண்டு விழா மற்றும் 75வது இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் கோவை, பழங்குடியின மக்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.



ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவசமாக வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகின்றனர். இதுவரை 84 மருத்துவ முகாம்களை கடந்த 11 மாதங்களில் நடத்தியுள்ளனர்.



இந்நிலையில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், கோவை மற்றும் கோவை ராஜம் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் கடந்த மார்ச் 19ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோதண்டபாணி பஜனை கோவில் வளாகம், பாரத்பவன் அருகில் உள்ள கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இதில், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தா மகராஜ் ஒருங்கிணைப்பில், கோவை ராஜம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர்.சுந்தரவேல், மருத்துவர். S. சுகுணா மற்றும் மருத்துவக் குழுவினர் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.

இந்த நிகழ்விற்கு ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி நம்விரத்தானந்தா மகராஜ் தலைமை தாங்கினார். மேலும் இந்த முகாமில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மருத்துவ முகாம் பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் M.ஜெய்குமார், திருமூர்த்தி, காமராஜ், ஈஸ்வரன் மற்றும் அட்சயம் அறக்கட்டளை நிர்வாகிகள் லக்ஷ்மி நாராயணன், உமா ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தினர்.



மேலும் இந்த இலவச மருத்துவ முகாமில், பழங்குடியின மக்கள் (குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியோர்) 73 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.



இவர்களுக்கு மருத்துவ குழுவினர் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மாத்திரைகள், மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகளை இலவசமாக வழங்கினர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஷா கூறியதாவது, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சார்பில் மாதந்தோறும் நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக் கூறி மனதார நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...