கோவையில் பெயிண்டர் கொலை - நண்பனை கைது செய்து போலீசார் விசாரணை

கோவை வடவள்ளியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வேடப்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ஜெகன்ராஜை, மதன்ராஜ் கத்தி மற்றும் கட்டையால் தாக்கினார். பலத்த காயமடைந்த ஜெகன்ராஜ் உயிரிழந்த நிலையில், வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர் மகன் ஜெகன் ராஜ்(வயது30). பெயிண்டரான இவர் நம்பியழகம்பாளையம் பகுதியைச்சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதன்ராஜ், இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்குமுன் ஜெகன்ராஜ், மதன்ராஜிடம் செல்போன் ஒன்று வாங்கி தரக்கூறி பணம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட மதன்ராஜ் செல்போன் வாங்கி தராமல் நீண்ட நாட்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஜெகன்ராஜ், மதன்ராஜின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மதன்ராஜ் இல்லாத நிலையில் மதன் ராஜன் மனைவியிடம் "உன் கணவர் எனது அக்காவுடன் பழகி வருகிறார், எனது அக்கா இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்கிறாய், வீட்டை காலி செய்" என கூறி பிரச்சனை செய்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மதன்ராஜ் தனது மனைவிடம் பிரச்சனை செய்ய வேண்டாம். அங்கிருந்து செல்லுமாறு கூறியும், தொடர்ந்து ஜெகன்ராஜ் பிரச்சனை செய்ததால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், அங்கிருந்த கத்தி மற்றும் கட்டையை எடுத்து தாக்கியுள்ளார்.

இதில் ஜெகன்ராஜ்க்கு தலை மற்றும் கண், உதட்டு பகுதி, கால்கள் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.



இதனையடுத்து அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்றில் ஜெகன்ராஜை ஏற்றிச்சென்று வீரகேரளம் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானம் அருகில் வீசி சென்றுவிட்டார்.

மேலும் ஜெகன்ராஜின் சகோதரி தேவிகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதன்ராஜ், ஜெகன்ராஜை 108 ஆம்புலன்சில் வந்தவர் பரிசோதித்து விட்டு நிலைமை மோசமாக உள்ளது என கூறியதும், அந்த இடத்திலேயே ஜெகனை போட்டுவிட்டு சென்று விட்டதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து, மயானப் பகுதிக்கு விரைந்து சென்ற தேவிகா மற்றும் உறவினர்கள் சென்று பார்த்த போது அங்கு ஜெகன்ராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது தொடர்பாக தேவிகா வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவலளித்தன் பேரில் விரைந்து வந்த போலீசார், ஜெகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேவிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மதன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், மதன்ராஜ் ஏற்கனவே ஒரு முறை ஜெகன்ராஜை இடுப்பில் கத்தியால் குத்தி உள்ளார். மேலும் பல வழக்குகள் மதன்ராஜ் மீது இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஜெகன் ராஜ் கொலையில் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா? யாருடைய ஆட்டோ பயன்படுத்தப்பட்டது? என்ற கோணங்களில் வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...