உடுமலை நகராட்சியில் பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனர்கள் - பரபரப்பு!

உடுமலை அடுத்த காந்திநகர் பேருந்து நிறுத்தத்தை மறைத்து, அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் பேருந்துக்காக காத்து கிடக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் அத்தகையை பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனரால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

உடுமலை நகராட்சி பகுதிகளில், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பேருந்து நிறுத்தம் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கபட்டு உள்ளன.



பிரதான சாலைகளான, பழநி சாலை, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை, தளி சாலை, திருப்பூர் சாலை, ராஜேந்திரா சாலை மற்றும் தளி சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தம், அனுஷம் சாலை சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



இதற்கிடையில் உடுமலை காந்திநகர் பேருந்து நிறுத்தத்தை மறைத்து, அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் பேருந்துக்காக காத்து கிடக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஓரு சில இடங்களில் காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆகையால் அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதிமீறி, இவ்வாறு அமைக்கப்பட்டு வருகிறது. பிளக்ஸ் பேனர்களால், கவன சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக உடுமலை நகர பகுதிகளில், விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களைஉடனே அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை வேண்டும் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...