தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தர்ணா - பரபரப்பு!

தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி, மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சங்க பிரதிநிதிகளை சந்திக்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், கோட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராணியை கண்டித்து நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை சாலை பணியாளர்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோட்ட தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கோட்ட இணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் மணிமொழி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த தர்ணா போராட்டத்தில், தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிலையில், திடீரென நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க கொடிகளுடன் பிளக்ஸ் பேனரை பிடித்தவாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்குள், கோட்ட பொறியாளர் ராணியை கண்டித்து கண்டன கோஷங்களுடன் உள்ளே நுழைய முயன்றனர்.



அப்போது அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலுவலக நுழைவாயிலில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சாலை பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து கோட்ட பொறியாளர் ராணி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சத்தம் போட வேண்டாம் என்றும் பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் வேலை நேரத்தில் எப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், ஊழியர்கள் அதற்கு விடுப்பு கடிதம் வழங்கிய பின்னரே போராட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய கோட்ட பொறியாளர் ராணி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்த சாலை பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்த சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது, தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளராக இருந்து வரும் ராணி, அரசாங்க அதிகாரியாக நடந்து கொள்ளாமல் ஜமீன்தார், பண்ணை முதலாளி அம்மாவாக நடந்து வருகிறார்.

பொதுமக்களின் பிரதிநிதிகளை சந்திப்பதில்லை, சாலை பணியாளர்களை, அரசு ஊழியர்களை, சங்கப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் போக்கு. அரசு வேலை பார்க்கும் கோட்ட பொறியாளர் ராணிக்கு ஏற்புடையதல்ல. தாராபுரம் கோட்ட பொறியாளர் மீது துறை ரீதியில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு வழங்கியுள்ள உரிமைகளை வழங்க கோரி மனு கொடுக்க வந்த நிர்வாகிகளை பல மணி நேரம் காக்க வைத்து ராணி முடியாது என்று அவமதிப்பு செய்துள்ளார்.

கோட்ட பொறியாளர் பல நாட்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த ஊழியர்களை யாரையும் சந்திப்பதில்லை, பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன வழி என்பது தெரியாமல் பலரும் சிரமமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...