கோவை பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் சுருண்டு விழுந்து பலி

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் பாரீஸ்(13) பூங்காவில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது, மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பூங்காவில் விளையாண்டு கொண்டிருந்த பள்ளி மாணவன் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் பாரீஸ் (13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சல்மான் பாரீஸ் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

பின்னர் தனது பெற்றோரிடம் பிருந்தாவன் சர்க்கிளில் உள்ள பூங்காவிற்கு நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றார். பூங்காவிற்கு சென்ற சல்மான் பாரீஸ் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் பூங்காவிற்கு விரைந்து சென்று சல்மான் பாரீசை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.

இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சல்மான் பாரீசை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...