கோவையில் நகைச்சுவை நடிகர் குணா உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


கோவை: நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர்.



முக்கியமாக நடிகர் கவுண்டமணி மாதிரி அச்சு அசலாக பேசியும், நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்தவர்.



பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் டயாலிசிஸ் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...