கோவையில் பிரபல அரிசி கடத்தல் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கோவை உக்கடத்தில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,250கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நிஜாமூதின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனிலிருந்து சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதாக பொள்ளாச்சி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்து போது, 45 கிலோ வீதம் 50 மூட்டைகளில் சுமார் 2,250 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான போத்தனூர், திருமறை நகரை சேர்ந்த நிஜாம் (எ) நிஜாமூதீன் என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், நிஜாமுதீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணையை வழங்கினார்.

அதன்படி இன்று கோவை மத்திய சிறையில் உள்ள நிஜாமுதீனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை சார்வு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...