கூடலூரில் குட்டிகளுடன் வந்த யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கூடலூர் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



இந்த நிலையில் அத்திக்குன்னு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் இன்று மாலை காட்டு யானை கூட்டம் ஒன்று திடிரென புகுந்தன. அதனை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் பதறியடித்து ஓடினர்.

யானை கூட்டம் வருகையால் தேயிலை பறிப்பு வேலை பாதிக்கபட்டது. இதனையடுத்து அச்சமடைந்துள்ள தோட்ட தொழிலாளர்கள், காட்டு யானை கூட்டத்தை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி உள்ளதால் யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...