வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை - வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு

வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு செய்தார். வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.



இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் இன்று சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர், ஜே ஜே நகர், சோலையார் அணை இடதுகரை, வலதுகரை காவல் நிலையம் உட்பட்ட அனைத்து பகுதிகளும் பட்டா வழங்குவதற்கு பெயர் மற்றும் விலாசங்களை ஆய்வு செய்தார்.



மேலும் சோலையார் அணை பகுதியில் பராமரிக்கப்பட்டுள்ள அணையின் மீன் வளர்ப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு பணியின் போது வால்பாறை வட்டாச்சியர் ஜோதிபாசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...