தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.



அதனை தொடர்ந்து, எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செட்டிபாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் கூடத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி சிறார் நல திட்டத்தின் கீழ் நடைபெற்ற சுகாதார முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தீத்திபாளையம் ஊராட்சியில் எஸ்.எப்.சி திட்டத்தின் கீழ் காளப்பாளையம் பகுதியில் 7.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



அப்போது, இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் நியாயவிலை கடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5.58 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் 3,30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 3.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, இக்கரை போளுவாம்பட்டியில் 1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காளான் வளர்ப்பு குடில் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜாகீர்நாயக்கன் பாளையம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நான்கு பயனாளிகளுக்கு வேளாண் உபகாரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார் வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...