தாராபுரம் அருகே காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம் அருகேயுள்ள கருங்காலி வலசு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சஞ்சய், காதல் தோல்வி காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கருங்காலி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(19). டிரைவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். இவரது காதல் விவகாரத்தை அறிந்த சஞ்சய் குமாரின் தந்தை அறிவுரை கூறியுள்ளார்.

இதனால், மனமுடைந்த சஞ்சய் குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...