கோவை அருகே பைக் மீது மான் மோதல் - வாலிபர் உயிரிழப்பு

கோவை: கணுவாய்பாளையம் அருகே பைக் மீது மான் மோதியதில்,பைக் கட்டுபாட்டை இழந்து மரத்தின்மீது மோதியதால், சமயபுரத்தைச் சேர்ந்த மிதுன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சந்துரு, நிதின்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.


கோவை: காணுவாய்பாளையம் அருகே பைக் மீது மான் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் காரமடை தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தை சேர்ந்தவர் மிதுன் (20). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான சந்துரு, நிதின்குமார் ஆகிய பைக்கில் சென்றார். பைக்கை சந்துரு ஓட்டி சென்றார்.

பைக் கணுவாய்பாளையம் - பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் சென்ற போது திடீரென பைக் மீது மான் மோதியது. மான் மோதிய வேகத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, நிதின்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...