சூலூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதல் -டிரைவர் பலி

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் சசிகுமார்(48). ஆட்டோ டிரைவரான இவர் நண்பரான இளம்வழுதியுடன் ஆட்டோவில் குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பலியாகினார்.


கோவை: குளத்துப்பாளையம் பிரிவு அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கேரள மாநில வாலிபர் பலியாகினார்.

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (48). ஆட்டோ டிரைவரான சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த இளம்வழுதி (52) என்பவருடன் கேரளா நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.

குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஆட்டோவின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோவுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இளம்வழுதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...