உலக காடுகள் தினம் - தாராபுரத்தில் நகராட்சி தலைவர் மரக்கன்றுகள் நடல்

தாராபுரத்தில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு, நகராட்சி சார்பில் உரக்கிடங்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நட்டு வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் நகராட்சி சார்பில் நகராட்சி உரக்கிடங்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நட்டு வைத்தார்.



'வனம் காப்போம் வளம், பெறுவோம் மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்ற நோக்கத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில் உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமை தாங்கினார்.



நகராட்சி தலைவர் பாபு கண்ணன் நகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் செய்யக்கூடிய மலையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு மரக்கன்றை நட்டு வைக்க வேண்டும்.



அப்போது தான் நாம் மறைந்தாலும், அந்த மரக்கன்று பெரிய மரமாக வளர்ச்சி தரும் பூமிக்கு குளிர்ச்சி ஊட்டி மலையைப் பொழிய வைக்கிறது. அத்துடன் நமக்கு வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் நன்மையை உண்டாக்கும்.

அதனால் இந்த நாளை நினைவு கூர்ந்து, ஒவ்வொருவரும் கட்டாயமாக மரம் வீடு தரும் நட்டு அதனை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரகாஷ், நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...