பொள்ளாச்சியில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுநர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம், பான்பராக், பான் மசாலா, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை உள்ளிட்டவை குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரவு நேரத்தில் இயக்கப்படும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.



பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓட்டுநர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம் குறித்தும், பல ஓட்டுனர்கள் பயன்படுத்தும் பான்பராக், பான் மசாலா, புகையிலை போன்ற தேவையில்லாத போதை பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்றும்,



போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார். மேலும், நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்ல வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும் என்றும் முருகானந்தம் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில், ஏராளமான ஓட்டுனர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகண்ணன், டாக்டர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...