பல்லடம் தனியார் இரும்பாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் - அமைதிப்பேச்சு வார்த்தை வெற்றி

பல்லடம் அருகே பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து, அனுப்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையின் இயந்திர இயக்கத்தினை நிறுத்தி வைக்க வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையிலும் சட்டவிரோதமாக தனியார் இரும்பு உருக்காலை இயங்கி வருவதாக கூறி கடந்த ஐந்து நாட்களாக அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்த நிலையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ,காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கிராம மக்களை அழைத்து அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



12 மணி நேரமாக தொடர்ந்த இந்த அமைதி பேச்சு வார்த்தையில் கிராம மக்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இரும்பு உருக்காலை பின்பற்றாத அரசு விதிமுறைகள் குறித்தும், வட்டாட்சியரிடம் முறையிட்டனர்.



மேலும், ஆலை இயங்குவதற்கான உரிமம், குறித்த ஆவணங்களை கேட்டபோது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த ஆவணங்களையும் தராததால் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமம் குறித்த ஆவணத்தை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்தார்.

அதில் 2014 ஆம் ஆண்டு அளித்த உரிமம் 2015 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில், கடந்த எட்டு வருடங்களாக முறையான உரிமம் பெறாமல் ஆலை இயங்கி வருவது தெரியவந்துள்ளது. மேலும் மார்ச் 31 ஆம் தேதியுடன் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட உரிமம் முடிவடையும் நிலையில், மீண்டும் உரிமத்தை புதுப்பிக்க ஆலை நிர்வாகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மக்கள் பார்வைக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கேட்ட ஆவணங்களை அதிகாரிகள் வழங்காததால் 12 மணி நேரமாக அமைதி பேச்சு வார்த்தை நீடித்தது.

மேலும் உரிமத்தை நீட்டிப்பு செய்ய ஆலை நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பி அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வட்டாச்சியர் ஜெய்சிங் சிவக்குமார், ஆலை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்களையும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த ஆவணங்களையும் வைத்து விசாரணை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த உரிமம் முடிவடைந்த பிறகும் 8 ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் ஆலை இயங்கி வருவதால் உரிமத்தை நீட்டித்துக் கொள்ள ஆலைக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாலும், உரிய உரிம நீட்டிப்பு இல்லாமல் ஆலை இயங்கினால் பல்வேறு பொதுச்சூழலை பாதிக்கும் எனவும், இந்த ஆலையை இயக்க உரிமம் நீட்டிப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உள்ளதாலும், ஆலையின் இயந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

12 மணி நேரமாக நீட்டித்த அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில் வட்டாட்சியரின் உத்தரவிற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...