வால்பாறை அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய பள்ளி பேருந்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

வால்பாறை அருகேயுள்ள முடீஸ் - தெப்பகுளம் இடையிலான புதிய சாலையில் சென்ற பள்ளி பேருந்து எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது, சாலையோர பள்ளத்தில் இறங்கிய நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பள்ளி பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் 62 க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதியில் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு வால்பாறையில் இருந்து பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு எஸ்டேட் சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் இயக்க முடியாமல் இருந்தன.

இந்நிலையில், நகராட்சி சார்பில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நீண்ட நாள் கோரிக்கையான தாய்முடி எஸ்டேட் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் பகுதி வரை 16 கிலோ மீட்டர் வரை 16 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



தற்போது பன்னிமேடு பகுதியிலிருந்து முடீஸ் தெப்பக்குளம் பகுதி வரை சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. மேலும், முடீஸ் பகுதியிலிருந்து சோலையார் பகுதி வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.



இதனிடையே நேற்று மாலை வால்பாறையில் இருந்து ஹைஃபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு பள்ளி குழந்தைகளுடன் சென்ற பேருந்து ஒன்று முடீஸ் பகுதியில் எதிரே வந்த பேருந்துக்கு வழி விடும் போதுசாலையோரபள்ளத்தில் இறங்கியது.



சாலையோர பள்ளத்தில் இறங்கிய பேருந்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கிரேன் உதவியுடன் பேருந்தை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாகபேருந்தில் இருந்த பள்ளி குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

புதிய சாலை அமைக்கும் பொழுது சாலையை தோண்டாமல் சாலைக்கு மேல் சல்லி தார் போடப்பட்டு சாலை அமைக்கப்பட்டதால் சாலை உயரமாக காணப்படுகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.



முடீஸ் முதல் தெப்பக்குளம் வரையிலான புதியசாலையானது ஒரு பேருந்து மட்டுமே செல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. எதிரேவரும் வாகனத்திற்கு வழி விடும் பொழுது பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டுனர்கள்தெரிவிக்கின்றனர்.



மேலும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது சாலையில் இருந்து கீழே விழும் அபாயத்திற்கும் தள்ளப்படுகின்றன.

புதிய சாலை அமைக்கும் பொழுது தமிழக அரசு அறிவுறுத்தலின்படி சாலையை தோண்டிய பின் சாலையை உயரப் படுத்தாமல் சாலை அமைக்க வேண்டும் என்றும், சாலையின் இரு புறங்களிலும் பள்ளம் இல்லாமல் சாலையை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...