வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம்!

வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்து பேராசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வால்பாறையில் காவல்துறை சார்பில் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆய்வாளர் கற்பகம் மற்றும் துணை ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு, தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் இடையேயான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். தனிமையில் இருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். படிப்பிலும், விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்த வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...