கோத்தகிரி சோதனைச்சாவடிக்கு வந்த காட்டுயானை - உயிர் தப்பிய போலீசாரின் வைரல் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்த ஒற்றை காட்டு யானையிடமிருந்து இரவு பணியில் இருந்த போலீசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண் காட்டு யானை ஒன்று அவ்வப்போது உலா வருகிறது. இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவது, சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் வழிமறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.



இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று இரவு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மாநிலநெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு வந்தது.

அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அச்சமடைந்து, அங்கிருந்த தற்காலிக செட்டிற்குள் சென்று சத்தமின்றி மறைந்து கொண்டனர்.

அங்கு சென்ற காட்டு யானை சோதனை சாவடியில் பறிமுதல் செய்து வைக்கபட்டிருந்த குடி நீர் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து மிதித்து சேதப்படுத்தியதோடு, நீண்ட நேரத்திற்கு பிறகு சோதனை சாவடியை விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...