கோவையில் விலாசம் கேட்பது போல் நகைபறிப்பு - மடக்கி பிடித்த பொதுமக்கள்!

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த குஷ்பூ என்பவர் கணவருடன் கடைக்கு சென்று திரும்பிய போது விலாசம் கேட்பது போல், அவரின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்துச் செல்ல முயன்ற சித்தாபுதூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு அருகே விலாசம் கேட்பது போல் தாலி சங்கிலியை பறித்துச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வெள்ளகிணறு பகுதியை சேர்ந்தவர் குஷ்பூ. இவர் நேற்றிரவு இரவு தனது கணவர் ஆனந்தவேலுடன் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு இருவரும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, இவர்களை மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டின் அருகே வந்த போது, பின்னால் வந்த நபர்கள் வாகனத்தில் இருந்தபடியே, குஷ்பூவிடம் விலாசம் கேட்டுள்ளனர்.

குஷ்பூ அதற்கு பதிலளிக்க துவங்கிய நிலையில் குஷ்பூவின் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில், உடனடியாக ஆனந்தவேல் சத்தமிட்டதை தொடர்ந்து அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(28) என்பதும், கூலித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் வாகனத்தில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...