மறைந்த பலகுரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் அஞ்சலி!

மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு, ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர், கோவையில் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



கோவை: மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் மற்றும் சக மிமிக்கிரி கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து பல்வேறு பலகுரல் கலைஞர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் நகைச்சுவை நடிகர்களான ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து கோவை குணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், பலகுரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலானது கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...