மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை பார்க்கிறோம்..! - நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் உருக்கம்!

கோவை குணா தான், எவ்வளவு சம்பாதித்தாலும் நண்பர்கள் உதவி எனக்கேட்டால் அதனை கொடுத்துவிட்டு சென்று விடுவார் என்றும், நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை அந்த இடத்தில் வைத்து பார்ப்பதாக பெஞ்சமின் கண்ணீர் மல்க தெரிவித்தார்.



கோவை: நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தில் கோவை குணாவை பார்க்கிறோம் என நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், பலகுரல் கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகர்களான திருப்பாச்சி பெஞ்சமின் மற்றும் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, குணாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பெஞ்சமின், கோவை குணா, நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் எங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மிகவும் எளிமையான மனிதர். இதுவரை யாருடைய மனதையும் அவர் புண்படுத்தியது இல்லை.

எவ்வளவு சம்பாதித்தாலும் நண்பர்கள் உதவி என கேட்டால் அதனை கொடுத்துவிட்டு சென்று விடுவார். நடிகர் மயில்சாமிக்கு அடுத்தபடியாக கோவை குணாவை அந்த இடத்தில் வைத்து பார்க்கிறேன்.

நல்ல மனிதர்களை எல்லாம் கடவுள் சீக்கிரமாக அழைத்துச் சென்று விடுகிறார். தொலைக்காட்சி வருவதற்கு முன்பே கோவை குணா மிகவும் பிரபலமானவர். அப்போது இருந்து அவருடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கோவை குணாவின் ஆத்மா சாந்தியடைய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பாகவும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...