கோவையில் ரவுடிக்கு சரமாரி கத்திக்குத்து - தலைமறைவான மற்றொரு ரவுடிக்கு போலீஸ் வலை

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் மதுபோதையில் ரவுடி வேலு என்பவரை, சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மற்றொரு பிரபல ரவுடி தக்காளி மாதவன் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியை சேர்ந்த வேலு எனும் வேலுசாமி என்ற ரவுடி மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதேபோல் மற்றொரு பிரபல ரவுடியான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தக்காளி மாதவன் என்பவர் மீது சுமார் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறவே ரவுடி வேலு உயிருக்கு பயந்து ஓடியுள்ளான்.



அப்போது வேலாண்டிபாளையம் அடுத்த கொண்டசாமி நாயுடு வீதி பகுதியில் ஓடிய வேலுவை சுற்றி வளைத்த தக்காளி மாதவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாய்பாபாகாலணி காவல்நிலைய போலீசார், குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிய வேலுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தப்பியோடிய பிரபல ரவுடி மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...