மறைந்த கோவை குணாவின் உடலுக்கு கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி!

மறைந்த பல குரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு அவரது நண்பர்கள் கானா பாடல்களை பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.



கோவை: மறைந்த பலகுரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு அவரது நண்பர்கள் கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் பல குரல் கலைஞர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து அவரது உடல் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.



அப்போது, அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பலகுரல் கலைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றி கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.



அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்குள்ளவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...