உடுமலை பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை பணி தீவிரம்

உடுமலை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



திருப்பூர்: உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் தொடங்கி வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி வரை ராஜேந்திர ரோட்டில் உள்ள மாட்டுத் தொழுவம் பகுதியில் நடைபெற உள்ளது.



மேலும் உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தினமும் தோராயமாக 75நாய்கள் பிடிக்கப்படுகிறது. நாய்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ராஜேஸ்வரி கவுசலோ டிரஸ்ட் திருநெல்வேலி' என்ற அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.



இம்முகாமில் தெரு நாய்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் கருத்தடை செய்ய விரும்பினால் நகராட்சியை அணுகி தங்களது செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை செய்து கொள்ளலாம் என நகரமன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையர் சத்தியநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...