திருப்பூரில் 49வது சர்வதேச நிட் ஃபேர் கண்காட்சி - வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்பு

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சி இன்று தொடங்கியது. 70 அரங்குகளில் செயற்கை நூலிழை ஆடைகள், மறு சுழற்சி ஆடைகள், பேபி கேரிங் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள இந்தியா நிட்பேர் கண்காட்சி வளாகத்தில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சி இன்று தொடங்கியது.



மூன்று நாட்கள் நடைபெறும் கோடை, குளிர் கால ஆடைகள் கண்காட்சியை இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் செயல் அதிகாரி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



இந்த கண்காட்சியில் 70 அரங்குகளில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தயாரிப்புகள் செயற்கை நூலிலை ஆடைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்தக் கண்காட்சியை ஏராளமான வெளிநாட்டு வர்த்தகர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.



ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், ஐகேஎப் அசோசியேசன் சார்பில் இந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.



குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், பசுமை தரக்கூடிய மூங்கில் மூலம் தயாரிக்கும் பேபி கேரிங் ரக ஆடைகள், விளையாட்டு ஆடைகள், மறு சுழற்சி முறையில் ஆடை தயாரிக்கும்போது விழுகின்ற கட்டிங் வேஸ்ட், பிளாஸ்டிக் பெட் பாட்டில்ஸ் மூலம் நூல் உற்பத்தி செய்து தொடர்ந்து டி. சர்ட், குழந்தைகள் ஆடைகள் தயாரித்து இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.



செய்தியாளர்களை சந்தித்த ஆதித்யா குழுமங்களின் செயல் அதிகாரி ராமச்சந்திரன், 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த திருப்பூர் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் நூல்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை வரவேற்பு பெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் அதன் பாதையில் செல்ல துவங்கி இருக்கிறது. நிச்சயம் இது வளர்ச்சி பெறும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...