கோவை இடையர்பாளையத்தில் சிக்னல் பழுது : தாறுமாறாக ஓடும் வாகனங்கள்!

கோவை இடையர்பாளையத்தில் சிக்னல் இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையத்தில் சிக்னல் இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் கோவை-தடாகம் சாலையும் ஒன்றாகும். காந்தி பார்க், பால் கம்பெனி, ஜி.சி.டி, வெங்கடாபுரம், வேலண்டி பாளையம், கோவில்மேடு, இடை யார்பாளையம், சிவாஜி காலனி, டி.வி.எஸ் நகர், கணுவாய், ஆனைகட்டி பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுவாகும்.

இந்த சாலையின் மையப்பகுதி இடையர்பாளையம் பிரிவாகும். இடையர்பாளையம் பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பில் ஒருபுறம் கவுண்டம்பாளையத்திற்கும், ஒருபுறம் வடவள்ளிக்கும், ஒருபுறம் கணுவாய்க்கும், ஒருபுறம் காந்தி பார்க்குக்கும் செல்லக்கூடிய சாலையாகும்.

இந்த நான்கு ரோடு சந்திப்பில் எந்நேரமும் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்று கொண்டிருக்கும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வரிசையாக சென்றது. ஆனால் தற்போது பல மாதங்களாக இந்த சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் அத்துமீறி செல்லும் அவல் நிலை உள்ளது.

இது குறித்து மக்கள் கூறியதாவது:

சராசரியாக ஒரு நாளைக்கு இந்த இடையர்பாளையம் பகுதி சிக்னலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. சிக்னல் இயங்கி கொண்டிருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது சிக்னல் இயங்கப்படவில்லை. போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை.

இதனால் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்லும் சூழ்நிலை உள்ளது.

4 சக்கர வாகனங்கள் வருவதற்கு முன்கூட்டியே இரு சக்கர வாகனங்கள் குறுக்கே புகுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் தாய்மார்கள் அவ்வப்போது கீழே விழுந்து எழும் சூழ்நிலையும் காணப்படுகிறது. மேலும் தடாகம் சாலையானது செங்கல் லாரிகள் அதிகம் பயணிக்கும் சாலையாக உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் இதனை கருத்தில் கெண்டு இந்த சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் போக்குவரத்து போலீசார் இந்த இடத்தில் நின்று போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் விபத்துகளை சந்திக்க நேரிடும். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...