உடுமலை அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.


திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், உடுமலை அரசு மருத்துமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதிய கட்டடங்கள் கட்டுமான பணியையும் ஆய்வு செய்ததோடு, விரைவில் பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், சர்வே பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பங்கள் நிலுவையில்லாமல், உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

உடுமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...