உடுமலையில் நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த மைதானம் குண்டும், குழியுமாக உள்ளதால், அதை பராமரிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலையில் குண்டும் குழியுமாக உள்ள நேதாஜி மைதானத்தை பாரமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, ஸ்கேட்டிங், கிரிக்கெட், ஹாக்கி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆயுத்தமாகும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவியர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் இரண்டு வேளையும் நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலையில் மைதானம் பரபரப்பாக காணப்படும்.



இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் மைதானத்தின் தாழ்வான பகுதிகளில் பள்ளம் போன்ற அமைப்பு உருவாகி உள்ளது.



இதனால் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

உடுமலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நேதாஜி விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்த ஏராளமானோர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளனர்.

அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இடைவிடாது பெய்த வடகிழக்கு பருவமழையால் மைதானத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆங்காங்கே வடிகால்கள் உற்பத்தியாகி தண்ணீர் சென்ற போது பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் குழந்தைகள் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்லும்போது தவறி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தி சுதந்திரமாக பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் உருவாவது தடுக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்டுள்ள மேடும் பள்ளமுமான பகுதியை பொக்லைன் எந்திரத்தின் மூலம் சமன்படுத்துவதற்கோ அல்லது மண்ணைக் கொட்டி சீரமைப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...