கோவை மாநகராட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்!

கோவை மாநகராட்சியில் 6 பேருக்கு ஓட்டுநர் பணி வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், கோவை மாநகராட்சிக்கு எதிராக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் (பணிமாற்று அடிப்படையில்) ஓட்டுநராக பணிபுரியும் சமூகநீதி தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜெயபால் மற்றும் 6 தொழிலாளர்கள் ஓட்டுநர் பணியிடம் வழங்க கோரி, ஜெயபால் உள்ளிட்ட 6 தூய்மை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007இல் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேருக்கும், ஓட்டுநர் பணியிடம் வழங்க வேண்டும் என்று கடந்த 2014இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கோவை மாநகராட்சி மேல்முறையீடு செய்ததில், மேல்முறையீட்டு வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஏழு பேருக்கும் ஓட்டுநர் பணி மற்றும் நிலுவை தொகையுடன் கூடிய ஓட்டுநர் ஊதியத்தை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும், பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு, ஓட்டுநர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...