ரமலான் பிறை தென்படவில்லை..! - தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரமலான் பிறை இன்று தென்படவில்லை எனவும், நாளை வெள்ளிக்கிழமை 24.03.23 ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.


சென்னை: தமிழ்நாட்டில் ரமலான் பிறை தென்படவில்லை என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும்.இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும்.நோன்பு என்பது சூரியன் உதிப்பதில் இருந்து சூரியன் மறையும் வரை அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள்.

புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில் தமிழகத்தில் ரமலான் நோன்புக்கான பிறை தென்படவில்லை. ஆகையால் நாளை வெள்ளிக்கிழமை 24.03.23 ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...