வடமாநில தொழிலாளர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேசும் அமைப்பினர், அரசியல் கட்சிகள், தமிழர்கள் எத்தனை பேரை வேலைக்கு அழைத்து வந்தாலும் பணிக்கு எடுத்துக்கொள்ள தயாராக உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்களை தமிழக காவல்துறை கைது செய்து வருகிறது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது வடமாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு துறை தொழிலாளர்கள் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து சமூகவலைதளங்களிலும் அதிகமாக கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதாறு பரப்புவோர் மற்றும் எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உற்பத்தித்துறையின்கீழ் செயல்படும் நூற்பாலை, வார்படம், பம்ப்செட், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்ற தமிழர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், இதன் காரணமாகவே வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து வார்பட தேசிய தொழில் அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) தென்மண்டல தலைவர், முத்துகுமார் கூறுகையில்,

கோவை மாவட்டத்தில் 700 வார்பட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் மொத்த தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். வடமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் கோவை மாவட்டத்தில் வார்பட தொழில் நிறுவனங்கள் செயல்படாது. தமிழர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை.

யாரும் இப்பணிக்கு வருவதில்லை. அவதூறு பேசுவோர் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கள நிலவரத்தை தெரியாமல் தொடர்ந்து இவ்வாறு செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்க எடுக்க வேண்டும், என்றார்.



இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(சிட்டி) தலைவர், ராஜ்குமார் கூறுகையில்,

தமிழ்நாடு முழுவதும் 2,000 நூற்பாலைளும், 600-க்கும் மேற்பட்ட கழிவு பஞ்சு நூற்பாலைகளும்(ஓபன் எண்ட்) செயல்பட்டு வருகின்றன. மொத்த தொழிலாளர்களில் வடமாநில தொழிலாளர்கள்தான் மிக அதிக பங்களிப்பு கொண்டுள்ளனர். நல்ல ஊதியத்துடன், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேரை அழைத்து வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பணி வாய்ப்பு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதைவிடுத்து அவதூறு பரப்பினால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கம்(டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,

பொறியியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் குறு மற்றும் சிறு தொழில்நிறுவனங்களில் பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்ற ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாவே வடமாநிலத்தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டிய நிலை உள்ளது.

அவதூறு செய்திகளை பரப்புவோர் மற்றும் போராட்டம் நடத்தும் அமைப்பினர் தொழில்முனைவோராகிய எங்களை தொடர்பு கொண்டு முதலில் பேச முன்வர வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். அதைவிடுத்து தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...