அத்திக்கடவு-அவிநாசி குடிநீர்த் திட்டக்குழாயில் உடைப்பு - 30 அடி உயரத்திற்கு பீச்சியடித்த தண்ணீர்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டக்குழாயில் சோதனை ஓட்டத்தின்போது ஏற்பட்ட திடீர் உடைப்பால், சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சிஅடித்து வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே குன்னத்தூரம்பாளையத்தில் அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டல் திட்டத்தின் 6வது நீர்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி சோதனை ஓட்டத்திற்காக இங்குள்ள 5வது நீர் ஏற்றும் நிலையத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்படி குன்னத்தூரம்பாளையம் குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள உள்ள 6 மின்மோட்டார்களில், ஒரு மோட்டாரில் நேற்று நீரேற்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அன்னூரில் இருந்து இத்திட்டத்திற்கு செல்லும் பிரதான குழாய்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கான சோதனை நடத்தப்பட்டது.



அப்போது, வடவள்ளி ஊராட்சி பெரிய புதூரில் உள்ள பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, அன்னூர் - காரமடை சாலையில் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சிஅடித்து வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அங்குள்ள சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



குழாய் உடைப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதேபோல், குருக்கிளியம்பாளையம், சாலையூர் பகுதிகளிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. இதையடுத்து, தொடர்புடைய அதிகாரிகள், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வுவ செய்து, பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...