தமிழக வேளாண்மை பட்ஜெட் - முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு பாராட்டு!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் கடைமடைவரை பாசனநீர் தடையில்லாமல் செல்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இது குறித்துப் பேசிய தனியரசு, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை பெரும் வரவேற்புக்குரியதாக இருக்கிறது. வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கடைமடை வரை பாசன நீர் தடையில்லாமல் செல்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

அதேபோல் சிறுதானியங்களை மக்களுடைய உபயோகத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படும் வகையிலும் காட்சிப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும் வேளாண்மை அமைச்சருக்கும் பாராட்டுக்கள்.

விளை பயிர்களை தாக்கும் பூச்சிகள் இனம் கண்டுபிடிக்கவும், அதனை அழிக்கவும் ,அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு ஈடுசெய்ய கூடுதலாக மூன்று கோடி உறுப்பினர்கள், சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் உணவு தானிய உற்பத்திக்கான இலக்கு நிர்ணயித்து உணவு தானிய உற்பத்தியில் தட்டுப்பாடு இன்றி அதன் உற்பத்தியை நாளுக்கு நாள் அதிகரிக்க முனைப்பு காட்டப்படும் எனும் அறிவிப்பு விவசாயிகள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்குவதில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு காத்திருப்போர் பட்டியல் இல்லை என்று அறிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பை கொடுப்பதில் விவசாயிகள் பலனடைந்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

டெல்டா மாவட்ட பகுதிகளில் கடைமடைவரை பாசன நீர் தடையில்லாமல் சென்றுசேர நீர் வழித்தடத்தை உரிய முறையில் சீரமைத்து பராமரிப்பது,விவசாய நிலங்களுக்கு செல்லும் உள்ளாட்சி கிராமங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் பாராட்டிற்குரியது என்று தனியரசு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...